குமார் சங்கக்கார முறையிட்டால் விசாரணை – பிரித்தானிய

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார முன்வைத்துள்ள முறைப்பாடு குறித்து விசாரணை நடத்த தாம் தயாராகவுள்ளதாக பிரித்தானிய உள்துறை காரியாலயம் அறிவித்துள்ளது. 

சரே விளையாட்டு கழகத்தில் விளையாடுவதற்காக லண்டன் சென்ற போது, லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் வைத்து குடிவரவுத்துறை அதிகாரி ஒருவரால் தான் கடுமையாக நடத்தப்பட்டதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு குமார் சங்ககார தனது டுவிட்டர் கணக்கில் பதிவு செய்திருந்தார். 

இது குறித்து உத்தியோகபூர்வமான முறைப்பாடொன்றை முன்வைத்தால், அது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று பிரித்தானிய உள்துறை காரியாலயத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


Related

Sports 1457388047213672055

Post a Comment

emo-but-icon

item