கடும் மழை காரணமாக 28 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு
http://weligamanewsblog.blogspot.com/2015/05/28.html
நாட்டில் தொடர்ச்சியாக பெய்யும் கடும் மழையினால் 28 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிரதான நீர்த்தேக்கங்கள் பலவற்றின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன தெரிவித்தார்.
அனுராதபுரம் மாவட்டத்தில் நுவர வாவி, நாச்சத்துவ மற்றும் ராஜாங்கனை நீர்த்தேக்கங்களும், பொலன்னறுவையில் பராக்கிரம நீர்த்தேக்கத்திலும் வான்பாய்வதாக அவர் கூறினார்.
அதனைத்தவிர, மட்டக்களப்பு, புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தற்போது உயர்வடைந்துள்ளதாக ஜானகி மீகஸ்தென்ன சுட்டிக்காட்டினார்.
எனவே, நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதியிலும், தாழ்நிலப் பகுதிகளிலும் வாழும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று (14) மாலை கடும் மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலயில் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது
