வெளிநாடு செல்லவிருந்த சகோதரர்கள் விபத்தில் சிக்கிய பரிதாபம்: கொழும்பில் சம்பவம்

வெளிநாட்டில் பணிபுரிவதற்காக மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பஸ்ஸில் வந்த இரு சகோதரர்கள் கொழும்பு சுகந்ததாஸ விளையாட்டு அரங்குக்கு அருக்கில் வைத்து இன்று அதிகாலை 4 மணியளவில் விபத்துக்குள்ளானத்தில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மட்டக்களப்பைச் சேர்ந்த 35 வயதுடைய சிறிதரன் மற்றும் 24 வயதுடைய டிலக்சன் ஆகியோர் வெளிநாட்டில் பணிபுரிவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் செல்வதற்காக மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு பஸ்ஸில் வந்துள்ளனர்.

கொழும்பு சுதந்ததாஸ விளையாட்டுக்கு அரங்குக்கு அருகில் பஸ்ஸில் இருந்து இறங்கி பஸ்ஸின் பின்புறமாக இருந்த தமது பொதிகளை எடுத்துகொண்டிருந்த போது வேகமாக வந்த டிப்பர் ரக வாகனமொன்று குறித்த நபர்கள் மீது மோதியுள்ளது.

இதில் பலத்த காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் னுமதிக்கப்பட்டுள்ளனர். டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.


Related

Popular 9212562280824122373

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the Week

cartoon

Popular Posts

item