பிரித்தானியாவில் 350 வருட காலத்திற்குப் பின் மிகவும் வயது குறைந்த பாராளுமன்ற உறுப்பினர்

பிரித்தானியாவில் கடந்த 350 வருட காலத்திற்குப் பின் தெரிவு செய்யப்பட்ட மிகவும் வயது குறைந்த பாராளுமன்ற உறுப்பினராக 20 வயது பல்கலைக்கழக மாணவி ஒருவர் விளங்குகிறார்.

ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் (எஸ்.என்.பி. கட்சியின்) சார்பில் போட்டியிட்ட மஹெய்ரி பிளேக் என்ற மேற்படி மாணவி வியாழக்கிழமை இடம்பெற்ற அந்நாட்டு தேசிய தேர்தலில் தொழில் கட்சி வேட்பாளர் ஒருவரைத் தோற்கடித்து வெற்றியை தனதாக்கிக் கொண்டுள்ளார்.

அவர் தென் பெய்ஸ்லி மற்றும் ரென்புறூஷியர் தேர்தல் தொகுதியில் 23,548 வாக்குகளைப் பெற்று போட்டி வேட்பாளரான டக்ளஸ் அலெக்ஸாண்டரை தோற்கடித்துள்ளார். டக்ளஸ் இந்தத் தேர்தலில் 17,804 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.

இது கடந்த நூறு ஆண்டுகள் காலப் பகுதியில் அந்தப் பிராந்தியத்தில் தொழிற் கட்சி சந்தித்த மிக மோசமான தோல்வியாக கருதப்படுகிறது.

தென் கிளாஸ்கோவில் பிறந்து வளர்ந்த பிளேக், கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொதுக் கொள்கைத் துறையில் இறுதி ஆண்டில் கல்வி கற்று வருகிறார்.

அவர் 1667 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பிரித்தானிய பாராளுமன்ற கீழ் சபைக்கு தெரிவு செய்யப்பட்ட மிகவும் வயது குறைந்த பாராளுமன்ற உறுப்பினராக விளங்குகிறார். 1967 ஆம் ஆண்டில் 13 வயதான கிறிஸ்தோப்பர் மொன்க் என்பவர் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.


Related

World 23019461213239207

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the Week

cartoon

Popular Posts

item