நாமல் ராஜபக்ஷவின் நீலப்படையணி வேறு பெயரில் இயங்கவுள்ளது
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_888.html
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் கலைக்கப்பட்ட நாமல் ராஜபக்ஷவின் தலைமையிலான நீலப்படையணி வேறு பெயரில் மீளவும் இயங்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் நாரஹன்பிட்டி அபயாரமயவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமயில் நடைபெற்ற கூட்டமொன்றில் இது தொடர்பாக நீலப்படையணியின் தலைவர் நாமல் ராஜபக்ஷவுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க மற்றும் படையணியின் உறுப்பினர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
