கோத்தா தொடர்பில் பிரதமரின் கருத்தை நியாயப்படுத்தும்: சுஜீவ சேனசிங்க
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_923.html
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தொடர்பாக உயர் நீதிபதி வழங்கிய தீரப்பு சம்பந்தமாக பொதுநலவாய நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட கருத்து சட்டரீதியானதென பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
சிங்கள வானொலி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழுவே இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.
சாதாரணமாக தீர்ப்பு வழங்கும் போது மூன்று பேரும் இணைந்து தீர்ப்பு வழங்குவது அவசியமானது.
இச்சந்தர்ப்பத்தில் இரண்டு பேருக்கும் தீர்ப்பு வழங்க முடியும் ஆனால் முக்கியமான பிரச்சினை ஒன்று சம்பந்தமாக மூன்று நீதியரசர்கள் தீர்ப்பை வழங்கினால் தான் முக்கியமானதாக இருக்கும்.
இதேவேளை, கோத்தபாய ராஜபக்ச தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் இலங்கையின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை நன்கு வெளிப்பட்டுள்ளதாக,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார் எனினும் தீர்ப்பு வழங்கிய முறை சம்பந்தமாக விடயங்களை பொது நலவாய நீதிமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
இது சம்பந்தமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஜாதிக்க ஹெல உறுமய பிரதமரின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென குறிப்பிட்டுள்ளது.
ஹெல உறுமயவின் கருத்து குறித்து பிரதி நீதி அமைச்சர் தெரிவிக்கையில், ஹெல உறுமய கூறுபவை தேவையற்றவை.
அந்த கட்சி அங்கு ஒன்று இங்கு ஒன்றும் கூறி வருகின்றது. இதனால் ஹெல உறுமய என்ன கூறுகிறதென்று எனக்கு தெரியவில்லை.
இந்த தீர்ப்பு சம்பந்தமாக ஹெல உறுமய என்ன கூறுகின்றதென அந்த கட்சியிடம் கேளுங்கள்.
பிரதமர் கூறுவது போல் பொதுநலவாய நீதிமன்றத்திற்கு அந்த விடயத்தை கொண்டு செல்வது பிரச்சினை இல்லை என பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

