முஸ்லிம் அமைப்புக்கள் பல இணைந்து தேர்தல் மாற்றத்துக்கு யோசனை
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_329.html
புதிய தேர்தல் முறைமையினால் சிறுபான்மையினரின் அங்கத்துவம் பாராளுமன்றத்தில் குறைவதாகவும், இதிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு புதிதாக 8 பல்அங்கத்துவ தொகுதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும், முஸ்லிம் அமைப்புக்கள் பல இணைந்து அரசாங்கத்துக்கு யோசனைகளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு, கொலன்னாவை, அக்குரணை, உடுநுவர, பேருவளை, மட்டக்களப்பு, மாவனல்லை, காலி என்பவற்றை பல்அங்கத்துவ தொகுதிகளாக முஸ்லிம் கட்சிகள் அடையாளப்படுத்தியுள்ளன.
இதற்கு மேலதிகமாக, மாவட்ட தொகுதி முறைமையின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு உறுப்பினர்களை சிறுபான்மையினருக்கு வழங்குமாறும் அக்கட்சிகள் தமது வேண்டுகோளில் முன்வைத்துள்ளன.
இந்த வேண்டுகோளை, அகில இலங்கை முஸ்லிம் லீக் இளைஞர் முன்னணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில், தேசிய சூரா சபை உட்பட முஸ்லிம் அமைப்புக்கள் பலவற்றின் தலைமையில் ஜனாதிபதிக்கும், தேர்தல் தொடர்பிலான அமைச்சரவை உப குழுவுக்கும் முன்வைத்துள்ளதாக இன்றைய சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
