ஞானசார மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_879.html
பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார மீது இன்று கொழும்பு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே அறிவித்திருந்தபடி அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாமையே இதற்குக் காரணமாகும். கோட்டாபய ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு வந்த போது அங்கு நீதிமன்ற உத்தரவை மீறி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டமை சம்பந்தமாக அவருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
