ஞானஸார தேரர் மாத்திரம் நீதிமன்றத்தில் ஆஜராக வில்லை
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_868.html

ஆர்பாட்டத்தின் போது நீதிமன்ற கட்டளையை மீறியமை தொடர்பில் அழைப்பணை விடுக்கப்பட்டிருந்த 27பேரில் 26பேர் கொழும்பு நீதிவான் முன்னிலையில் இன்று ஆஜராகியிருந்தனர்.
ஆயினும் கலகொட அத்தே ஞானஸார தேரர் மாத்திரம் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை என்பதுடன் அவர் வெளிநாடு சென்றுள்ளதாக சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
அரசியல்வாதிகள் மற்றும் ஏனையவர்களுக்கு பத்தாயிரம் ரூபா வீதம் ரொக்க பிணையிலும் பத்து லட்சம் ரூபா வீதம் சரீரப் பிணையிலும் விடுவிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதுடன் பிக்குமார்களுக்கு பத்து பேருக்கு பத்து லட்சம் ரூபா வீதம் சரீரப் பிணையிலும் விடுவிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
மேற்படி 27 பேரும் ஜூலை மாதம் 13ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
