கோட்டாபய கைது செய்யப்படுவதைத் தடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை நிறைவுபெறும் வரை அவர் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தாக்கல் செய்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அடிப்படை உரிமை மனுவை பரிசீலிப்பதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமில் இருந்து நீதியரசர் புவனேக அலுவிஹாரே இன்று விலகிக்கொண்டார்.

இதற்கமைய, உயர்நீதிமன்ற நீதியரசர்களான ஈவா வனசுந்தர மற்றும் சரத் டி ஆப்ரூ ஆகியோரினால் முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் அடிப்படை உரிமை மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மனு ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. - NewsFirst


Related

Local 3846081027495314978

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the Week

cartoon

Popular Posts

item