ஜப்பானில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவு
http://weligamanewsblog.blogspot.com/2015/05/68.html
ஜப்பான் நாட்டின் வட கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது.
இன்று காலை சரியாக 6.12 மணிக்கு பசிபிக் கடல் பகுதியான ஹோன்சு தீவுகளின் கிழக்கு கடல் பகுதியில், கடலுக்கடியே 38.9 கி.மீ ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.
எனினும் இந்நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. அதே போல் இந்நிலடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதா என இதுவரை எவ்வித தகவலும் வரவில்லை.
முன்னதாக கடந்த 2011 ஆம் ஆண்டு அந்நாட்டில் நிகழ்ந்த கடும் நிடுநடுக்கத்தால், சுனாமி ஏற்பட்டதன் காரணமாக 8000 பேர் கொல்லப்பட்டதுடன், புகுஷிமா அணு உலையில் கதிர்வீச்சும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
