ஞானசாரர் ஜப்பானில் - அதுதான் நீதிமன்றத்திற்கு வரவில்லை - திலந்த
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_816.html
வெசாக் நிகழ்வொன்றிற்காக ஜப்பான் சென்றமையினால் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரினால் நேற்று நீதிமன்றத்திற்கு ஆஜராக முடியவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றில் ஆஜராக வேண்டுமென்று இலங்கை வருவதற்கே ஞானசார தேரர் தீர்மானித்திருந்தார் எனினும் மீண்டும் வருவதற்காக விமான பயணச்சீட்டை பெற்றுக்கொள்ள அவரால் முடியவில்லை.
இவ்விடயத்தினை நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தோம் எனினும் அவருக்கு எதிராக நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவை மீறி கடந்த மாதம் 23ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமையால் கலகொடஅத்தே ஞானசார தேரர் உட்பட 27 பேர் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் ஆராஜாகுமாறு உத்தரவிடப்பட்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது.
