கோட்டாபய வழக்கு குறித்து ரணில் வௌியிட்ட கருத்து தவறானது!
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_813.html
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அடிப்படை உரிமை மீறல் குறித்த மனு தொடர்பில் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவு தொடர்பில் பிரதமர் வௌியிட்ட கருத்து சட்ட ரீதியானது அல்ல என, பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
பிரதமரின் இந்தக் கூற்று தவறானது என, நிமல் சிறிபாலடி சில்வா இது குறித்து வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நிதி குற்ற விசாரணைப் பிரிவினரின் நடவடிக்கைகளுக்கு சவால் விடுக்கும் வகையில் கோட்டாபய தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சட்ட ரீதியானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த தீர்ப்பை அவமதிக்கும் வகையில், ரணில் விக்ரமசிங்க போன்ற பிரபல அரசியல்வாதி ஒருவர் கருத்து வௌியிட்டுள்ளமை மிகவும் கவலைக்குறிய விடயம் என அவர் மேலும் கூறியுள்ளார்.
கோட்டாபய தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் அவரை கைதுசெய்ய தடை விதித்து வழங்கிய தீர்ப்பு சரியானது அல்ல என்ற வகையில் ரணில் விக்ரமசிங்க கூறியதாக முன்னர் செய்திகள் வௌியாகியமை குறிப்பிடத்தக்கது. (AD)
