இலங்கையில் இருந்து நூதனமுறையில் இந்தியாவுக்கு தங்கம் கடத்தியவர் கைது

மூன்று கிலோகிராம் தங்கத்துடன் இலங்கையர், இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இலத்திரனியல் உபகரணத்தில் மறைத்து வைத்த நிலையில் இந்த மூன்று கிலோகிராம் தங்கத்தை கடத்த முற்பட்ட போது, திருச்சி விமான நிலையத்தில் வைத்து குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் ஊடாக, சனிக்கிழமை (16) திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தபோது, குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி சுமார் 80 இலட்சம் இந்திய ரூபாய் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


Related

Local 4455217314715522313

Post a Comment

emo-but-icon

item