யாழ்.ஊரெழு பகுதியில் 4 கொள்கலன்களில் ஆயுதங்கள் மீட்பு (படங்கள் இணைப்பு)

யாழ்.ஊரெழு பகுதியில் வீடு கட்டுவதற்காக அத்திவாரம் வெட்டும் போது நிலத்தின் கீழ் இருந்து 4 கொள்கலன்களில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

ஊரெழு கணேசா வித்தியாலயத்திற்கு அண்மையில் உள்ள திருச்செல்வம் புவனேஷ்வரி என்பவரின் காணியிலிருந்தே குறித்த ஆயுத கொள்கலன்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று சனிக்கிழமை காலை அத்திவாரம் வெட்டும் போதே குறித்த கொள்கலன்கள் மீட்கப்பட்டுள்ளன. 

 மேலும் குறித்த கொள்கலன்களில் ஒன்றில் தமிழில் எழுதப்பட்டுள்ள குறிப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

 இதில்1986.09.12 என திகதியிடப்பட்டு 4 முட்டை, 2 டசின் பியூஸ், 2 சாவி என எழுதப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த பகுதி பொலிஸ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.




Related

Popular 4465398014989063998

Post a Comment

emo-but-icon

item