சேர், சேர் என்று கூறியே மஹிந்தவைக் கவிழ்த்த சகாக்கள் - ராஜித

சேர், சேர் என்று கூறியே மஹிந்த ராஜபக்சவை கடந்த அரசாங்கத்தில் இருந்த முக்கியஸ்தர்கள் கவிழ்த்துவிட்டனர். ஆனால் நான் பல இடங்களில் மஹிந்த ராஜபக்சவை எதிர்த்து குரல் கொடுத்துள்ளேன் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், கடந்த அரசாங்கத்தில் மஹிந்த ராஜபக்சவின் புகழ்பாடியே பலர் செயற்பட்டனர். அவரும் அந்த புகழ்ச்சிக்கு மயங்கி இருந்தார். 

சூரியன் உதித்ததும் உங்களால்தான் சேர், சூரியன் மறைவதும் உங்களால்தான் சேர், அனைத்தும் உங்களினால்தான் நடக்குது சேர் என்று மஹிந்தவை சுற்றி இருந்தவர்கள் கூறிவந்தனர். ஒருவர் அவருக்காக பாடினார். ஒருவர் கவிதை எழுதினார். மஹிந்தவை மன்னர் என்றும் கூறினர். மஹிந்த கடந்த தேர்தலில் வெற்றிபெற்றிருந்தால் கிரீடம் ஒன்றையும் அணிவித்திருப்பர். 

இவ்வாறு சேர், சேர் என்று கூறியே மஹிந்த ராஜபக்சவை கடந்த அரசாங்கத்தில் இருந்த முக்கியஸ்தர்கள் கவிழ்த்துவிட்டனர். ஆனால் நான் பல இடங்களில் மஹிந்த ராஜபக்சவை எதிர்த்து குரல் கொடுத்துள்ளேன். தேசிய பிரச்சினை விடயத்தில் மஹிந்த ராஜபக்சவின் கொள்கையை நான் விமர்சித்தேன். 

இன்று மஹிந்தவுக்காக குரல் கொடுப்பவர்கள் அன்று விமர்சிக்கவில்லை. மாறாக புகழ்பாடினர். ஆனால் இறுதியில் என்ன நடந்தது?


Related

Local 788110310055456453

Post a Comment

emo-but-icon

item