ஐ.தே.க. தேர்தல் நடத்தாது ஆணையாளர்களின் மூலம் உள்ளுராட்சிகளை நிர்வாகம் சதி
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_643.html
ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் நடத்தாது ஆணையாளர்களின் மூலம் உள்ளுராட்சிகளை நிர்வாகம் சதி செய்வதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சி அடக்குமுறை மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளின் மூலம் எதிர்கால தேர்தல்களை வெற்றியீட்ட முயற்சிக்கின்றது இதனால் கிராமிய அரசியல் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஜனநாயகத்தை வலப்படுத்தும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் என்ற ரீதியில் 19, 20ம் திருத்தச் சட்டங்களுக்கு ஆதரவளிக்கும் அதேவேளை, மாகாணசபைகளை விசேட ஆணையாளர் ஒருவரின் மூலம் நிர்வாகம் செய்வதனால் ஜனநாயகத்திற்கு ஏற்படும் ஆபத்துக்களை அனுமதிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
