மோனாலிசா ஓவியத்தில் புதிய ரகசியம்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_307.html
இத்தாலி நாட்டு ஓவியர் லியோனார்டோ டா வின்சி வரைந்த மோனாலிசா ஓவியம் உலகப் புகழ்பெற்றது. அந்த ஓவியத்தில் இருக்கும் பெண் யார் என்றும் அவரது மர்ம புன்னகைக்கு அர்த்தம் என்ன என்றும் ஏற்கனவே ஏராளமான கட்டுக்கதைகள் கூறப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இப்போது இந்த ஓவியம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஓவியர் டா வின்சி, தனது ஓவியத்தில் சில ரகசிய குறியீடுகளை பயன்படுத்துவாராம்.
வேற்று கிரகவாசிகள் இருந்தது உண்மை என்று அறிந்த அவர், இந்த மோனாலிசா ஓவியத்தில், வேற்று கிரகவாசியான பாதிரியார் ஒருவரது படத்தை ரகசியமாக வரைந்து இருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
அந்த பாதிரியார் நீண்ட அங்கி அணிந்து தலைப்பகையுடன் காட்சி அளிப்பதாகவும் இணையதளத்தில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இப்போது மோனாலிசா ஓவியத்தைப் பார்ப்பவர்கள், அதில் மறைந்து இருக்கும் வேற்று கிரகவாசியின் படம் எங்கே இருக்கிறது என்று தேட ஆரம்பித்து இருக்கிறார்கள்.
