ஐக்கிய தேசியக் கட்சியுடன் முதலில் கூட்டுச் சேர்ந்தது மஹிந்தவே. நான் அல்ல - ஜனாதிபதி
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_753.html
சிறீ லங்க சுதந்திரக் கட்சிக்காக தன்னைப் போன்று எவரும் அர்ப்பணிப்புக்களை மேற்கொள்ளவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். அவ்வாறு யாரேனும் இருப்பின் தன்னிடம் கூறுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மொனராகலை மாவட்ட சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களைச் சந்தித்த வேளையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, இது என்னுடைய கட்சி. இதனை பிரித்து இரண்டாக்க நான் ஒரு போதும் செயற்பட்டதில்லை எனவும் தெரிவித்தார்.
கடந்த அரசாங்கத்தில் இருந்து நான் வெளியேறியது சு.க யின் ஒருவனாகவே. மாறாக வேறு கட்சிக்களின் உறுப்பினர் ஒருவராகவல்ல. ஐ.தே.க யுடன் முதன் முதலாக கூட்டமைப்பை அமைத்தது மகிந்த ராஜபக்சவே. நான் அல்ல என்றும் அவர் உரையாற்றும் போது தெரிவித்தார்.
இன்று நாட்டைப் போன்றே கட்சியை வெற்றி பெறச் செய்யும் பொறுப்பும் தனக்கு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
