கொழும்பு - மாத்தறை பஸ் காலியில் வைத்துத் தீப்பற்றியது (படங்கள்)
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_589.html
கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி வந்து கொண்டிருந்த பஸ் வண்டி ஒன்று இன்று பகல் திடீரெனத் தீப்பற்றியுள்ளது. தீயினால் குறித்த பஸ் வண்டி முற்று முழுதாக எரிந்து போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ் தீப்பற்றும் போது பஸ்ஸில் சுமார் 60 பேர் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் தீ பரவ முன்னர் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர்.
அதன் பின்னர் சில நிமிடங்களில் பஸ் வண்டி முழுமையாக எரிந்து போயுள்ளதாகவும் இதனால் எவருக்கும் பாதிப்புக்கள் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பயணிகள் சிலரின் பயணப் பைகள் முற்றாக எரிந்து போயுள்ளன.







