ரீலோட் லஞ்சம் பெறும் கிராம உத்தியோகத்தர் - மக்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_128.html
ஹட்டன் ருவன்புர பிரதேசத்தில் கிராம உத்தியோகத்தர் ஒருவருக்கெதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த கிராம உத்தியோகத்தர் தனது கடமைகளைச் செய்ய பணம் மற்றும் ரீலோட் மூலம் இலஞ்சம் பெறுவதாகவும் அதனை எதிர்த்தே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலஞ்சம் வழங்காதவர்களுக்கு குறித்த கிராம சேவகர் எந்த வேலையையும் செய்து கொடுப்பதில்லை எனக்குற்றம் சுமத்தி கிராம உத்தியோகத்தர் அலுவலகத்திற்கு முன்னால் இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.





