மண் மேடு சரிந்து விழ்ந்ததில் பெண் மற்றும் குழந்தை பலி
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_738.html
பசறை, பிபிலேகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் பெண் ஒருவரும் 08 மாத குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.
நேற்று இரவு பெய்த கடும் மழைக்காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் உயிரிழந்த குழந்தையின் தாய் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை இன்றும் நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய கடும் மழைப் பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

