மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மயூரனின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றன (படங்கள்)

இந்தோனேஷியாவில் பாலி 9 வழக்கில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மயூரன் சுகுமாரனின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றுள்ளன.

இலங்கை வம்சாவளியான மயூரன் சுகுமாரன் அவுஸ்திரேலியாவில் அவரது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

மயூரன் சுகுமாரன் போதைபொருள் கடத்தலில் ஈடுப்பட்டார் என தெரிவித்து கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் திகதி கைது செய்யப்பட்டார்.

இவர் உள்ளிட்ட எண்மருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 29ம் திகதி நள்ளிரவில் இந்தோனேஷியாவின் நுசக்கம்பங்கன் சிறைச்சாலை தீவில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட மயூரன் சுகுமாரனின் இறுதி கிரியைகள் இன்று அவுஸ்திரேலியாவின் சிட்னியிலுள்ள டேஸ்பிரிங் தேவாலயத்தில் ஆராதனைகளுடன் இடம்பெற்றுள்ளது.

இங்கு மயூரனின் குடும்பத்தவர்களும், அவரது உற்ற நண்பரும் ஓவியருமான பென் கில்ற்றியும் உரையாற்றியுள்ளார்கள் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மயூரன் சுகுமாரனின் பூதவுடலுக்கு அருகில் நிறப்பூச்சு மற்றும் தூரிகை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் மயூரன் சுகுமாரன் அவுஸ்திரேலியாவின் மிக சிறந்த ஓவியர்களில் இரண்டாம் இடம் வகிக்கின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மயூரனுடன் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட அன்ட்ரூ சானின் இறுதிக் கிரியைகள் நேற்று சிட்னியில் இடம்பெற்றன.

உற்றார், உறவினர், நண்பர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு சானுக்கு பிரியாவிடை அளித்தார்கள்.

மயூரன் தம்மை விட்டு நிரந்தரமாக பிரியாவிடை பெற்றுச் செல்லும் தருணத்தில், அவரது புகைப்படங்கள் அடங்கிய ஆல்பத்தை பகிரங்கப்படுத்தியுள்ளனர்.

இதிலுள்ள படங்கள் மயூரனின் இளமை வாழ்க்கையையும், குத்துச் சண்டையில் அவருக்கு இருந்த ஆர்வத்தையும் புலப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.









Related

World 1981033941859573993

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the Week

cartoon

Popular Posts

item