நேபாள நில நடுக்கத்தின் எதிரொலி - இமய மலையின் உயரம் குறைந்தது
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_309.html
இமய மலையின் உயரம் சுமார் 1 மீற்றரால் குறைவடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதற்குக் காரணம் நேபாளத்தில் நடைபெற்ற மிகவும் சக்தி வாய்ந்த நில நடுக்கமே என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்மதிகள் மூலம் பெறப்பட்ட படங்கள் மற்றும் பூமியினுள் நடத்தப்பட்ட ஆய்வுகளை அடிப்படையாக வைத்தே அவர்கள் இம்முடிவுக்கு வந்துள்ளனர்.
எனினும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் பற்றி விஞ்ஞானிகள் மத்தியில் கருத்து மோதல்கள் காணப்பட்டு வருகின்றன. அது பற்றிய இறுதி முடிவை எடுக்க எவரெஸ்ட் சிகரத்தின் செய்மதிப் படங்களை இன்னும் ஆராய வேண்டும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
பூகம்பத்தால் இமய மலையின் உயரம் குறைவடைந்தாலும் காலப்போக்கில் அது பழைய நிலைக்குத் திரும்பும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
