இமதுவையில் அம்பியூலன்ஸ் வண்டி விபத்து (படங்கள்)
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_659.html
இமதுவ வைத்தியசாலைக்குச் சொந்தமான அம்பியூலன்ஸ் வண்டி இன்று விபத்துக்குள்ளானது. இமதுவையில் இருந்து காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளிகளை ஏற்றிக் கொண்டு சென்ற சந்தர்ப்பத்திலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டி ஒன்றுடன் நுகதுவையில் தென் அதிவேகப் பாதையின் நுழைவாயில் அருகேயே இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.
இவ்விபத்தின் காரணமாக அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதியும் காயமடைந்துள்ளார். பின்னர் கராப்பிட்டிய வைத்தியசாலைக்குச் சொந்தமான அம்பியூலன்ஸ் வண்டி ஒன்று வரவழைக்கப்பட்டு சாரதி உட்பட நோயாளிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.




