அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி: மீண்டும் பிரதமராக கமரூன்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_656.html
பிரிட்டன் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி 327 ஆசனங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மையைக் கைப்பற்றியுள்ளது. ஆட்சியமைக்க தேவையான 326 ஆசனங்களை அந்தக் கட்சி பெற்றுக்கொண்டுள்ளதால் மீண்டும் பிரதமராக டேவிட் கமரூன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அடுத்தபடியாக தொழிற் கட்சி மீண்டும் எதிர்க்கட்சியாக 232ஆசனங்களைப் பெற்றுத் தெரிவாகியது. இதுவரை வெளியான 646தொகுதிகளில் இந்த வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 4 தொகுதிகளின் முடிவுகள் வெளியாகவுள்ளன. 650 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கான இந்தப் பொதுத் தேர்தலில் ஐந்து கோடி மக்கள் தமது வாக்குகளைப் பதிவுசெய்திருந்தனர்.
பெட்ஃபோர்ட், கோப்லாண்ட், லீசெஸ்டர், மான்ஸ்ஃபீல்ட், மிடில்ப்ரோ, டோர்பே ஆகிய இடங்களுக்கு மேயரைத் தேர்வு செய்யவும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதேவேளை – பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழரான உமா குமரன், ஹரோ ஈஸ்ட் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
பிரித்தானியாவின் வடகிழக்கு ஹம்செயார் பகுதியின் கொன்சவேட்டிவ் கட்சில் போட்டியிட்ட இலங்கை பிரஜையான ரணில் ஜெயவர்த்தனவும் வெற்றிபெற்றுள்ளார்.
