இலங்கைக்கு வந்த போதும் ஸல்மான் கான் விபத்தொன்றில் சம்பந்தம்?
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_358.html
இலங்கையில் இடம்பெற்ற விபத்து ஒன்றிற்கும் நடிகர் சல்மான்கானுக்கும் தொடர்பு காணப்படுவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
சிங்கள ஊடகமொன்று இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நடிகர் சல்மான்கான் இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.
இதன்போது ராஜகிரிய கலப்புவாவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 18 வயதுடைய இளைஞனும், 17 வயதுடைய யுவதியும் காயமடைந்துள்ளனர்.
வேகமாக வந்த டிபென்டர் ரக வாகனமொன்று பஸ் தரப்பிடத்தில் நின்ற இளைஞனையும், யுவதியையும் மோதியது என அங்கிருந்தவர்கள் குறிப்பிட்டனர்.
இவ்விபத்திற்கும், நடிகர் சல்மான் கானுக்கும் தொடர்பு காணப்படுவதாக தெரிவித்த போதிலும் அவரை காப்பாற்றும் நோக்கில் அவரை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


