எமது கட்சியுடன் இணைந்து கொள்ளுங்கள் - கோட்டாபயவுக்கு பொது பல சேனா அழைப்பு
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_282.html
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை தனது அமைப்பின் புதிய அரசியல் கட்சியுடன் இணைந்து கொள்ளுமாறு பொதுபல சேனா அழைப்பு விடுத்துள்ளது.
அவர் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டதோடு, பொதுபல சேனா அமைப்புடன் இணைந்து அரசியல் நடத்துவது குறித்து அவர் இதுவரையிலும் எவ்வித தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை என அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரந்தெனிய நந்த தேரர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் உட்பட பலர் உள்ள நிலையில், இத்தினங்களில் அவர்களுடன் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்காக கட்சியை பதிவு செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்திடம் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீர்மானங்கள் மற்றும் கோரிக்கைகள் தேர்தல்கள் ஆணையாளரிடத்தில் எழுத்துமூலமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன்,
பெரும்பாலும் தமது கட்சியின் வேட்பாளர்களை விரைவில் முன்னிலைபடுத்துவதாகவும் தேரர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் சின்னம் மற்றும் பெயர் தொடர்பில் கலந்துரையாடுவதுடன், கட்சியாக பதிவு செய்தல் தொடர்பிலான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வித்தாரந்தெனிய நந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
