புங்குடுதீவு மாணவி பணத்துக்காகவே கொலை செய்யப்பட்டார் - வெளிவரும் உண்மைகள்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_409.html
யாழ்ப்பாணம் புதுக்குடியிருப்பு பகுதியில் மாணவி ஒருவரை கற்பழித்துக் கொலை செய்த சமபவத்தின் பிரதான சூத்திரதாரி அடுத்த மாதம் கைட்ஸ் பொலிஸ் நிலையத்தின் பெண் கான்ஸ்டபில் ஒருவரைத் திருமணம் செய்ய இருந்தவர் எனத் தெரிவிக்கப்ப்டுகின்றது.
இதனால் குறிப்பிட்ட நபர் அப்பிரதேச பொலிஸாருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொலை செய்யப்பட்ட வித்தியாவின் தாயார் இதற்கு முன்னர் பல வழக்குகளில் சாட்சிகளை வழங்கியுள்ளார் எனவும் இதுவே இக்கொலைக்கு பிரதான காரணம் எனவும் பொலிஸார் நடத்திய ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
வித்தியாவின் தாயார் வழங்கிய சாட்சியங்களால் பாதிக்கப்பட்டவர்கள் வழங்கிய பணத்துக்காகவே வித்தியா கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற விடயம் தற்பொழுது வெளியாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இக்கொலைக்கு 50000 ரூபா பொருந்தியுள்ளதாகவும் முதலில் முற்பணமாக 10000 ரூபா செலுத்தப்பட்டுள்ளதாகவும் கொலையைச் செய்த பின்னர் மிகுதிப் பணம் வழங்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வித்தியாவின் தந்தை நோயாளி என்பதால் ஓரிடமாக இருப்பதாகவும் 23 வயதான சகோதரன் கூலி வேலை செய்பவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
