நேபாளத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அமெரிக்க விமானம் மாயம்

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று திடீரென மாயமாகியுள்ளது.

குறித்த விமானத்தில் அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த ஆறு வீரர்களும் நேபாள இராணுவத்தைச் சேர்ந்த மூன்று வீரர்களும் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் பிரச்சினை காரணமாக குறித்த விமானம் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டில் காணப்படும் இருண்ட பனி மூட்டம் காரணமாக விமானத்தை தேடும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் அதிகாரிகள் விமானத்தில் மலையில் மோதி விபத்துக்குள்ளாவதற்கான தோற்றப்பாடுகள் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

நேபாளத்தின் எவரஸ்ட் சிகரத்துக்கு அருகில் உள்ள நம்ச்சே நகர் பகுதியிலே நேற்று 7.4 ரிச்டர் அளவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் 66க்கு மேற்பட்டோர் பலியானதுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளது.

மேலும் இரண்டு கிழமைகளுக்கு முன்னர் நேபாளம் காத்மண்டு பகுதியில் ஏற்பட்ட 7.8 ரிச்டர் அளவான நிலநடுக்கத்தில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Related

World 5165346466770184813

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the Week

cartoon

Popular Posts

item