ஐக்கிய தேசிய கட்சிக்கு மருந்து கொடுக்க மஹிந்த வருவார் - முத்துஹெட்டிகம
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_426.html
யானைக்கு உண்மையான மருந்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கிய பின்னரே கொடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்து ஹெட்டிகம தெரிவித்துள்ளார்.
காலி யக்கமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெண்ணைப் போல் நடந்து கொள்வதாகவும்,ரணில் விக்ரமசிங்கவிற்கு எவ்வித ஆளுமைகளும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
பெண்ணைப் போன்று நடந்துக்கொள்ளும் ரணில் விக்ரமசிங்கவுடன் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்புகளை பேணுவது வருத்தமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் இந்த நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறான போராட்டமாக இருந்தாலும், பாராளுமன்றத்தை எந்த நேரத்தில் கலைத்தாலும் நாங்கள் யாரும் பயப்பட போவதில்லை. தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுக்க நாங்கள் ஆயத்தமாகவே உள்ளோம்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு தொற்றியிருக்கும் நோய் என்னவென்றால் முன்னாள் தலைவர்கள் ஒவ்வொருவராக குற்றப் புலனாய்வு பிரிவிற்கு அனுப்புவதே, அந்த நோய்க்கான மருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கிய பின்னரே கொடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
