பட்டப்பகலில் முஸ்லிம்களின் நகைக் கடையில் கொள்ளை - கெலி ஓயாவில் சம்பவம்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_577.html
கெலிஓயாவில் இன்று பகல் 1.30 மணியளவில் பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அங்குள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான நகைக்கடை ஒன்றில் நுழைந்த ஆயுதம் தாங்கிய நான்கு பேர் துப்பாக்கி முனையில் கடையைக் கொள்ளையிட்டுள்ளனர்.
நகைக்கடையில் கொள்ளையடித்து விட்டுத் தப்பிச் செல்லும் சந்தர்ப்பத்தில் அவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பலர் காயமடைந்து பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொள்ளையர்கள் முழுத் தலைக்கவசம் அணிந்திருந்ததாகவும் தப்பிச்செல்லும் வழியில் வெளியே இருந்தவர்களையும் சரமாரியாகச் சுட்டதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
அங்கு போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில் வீதித் தடைகளைப் போட்டு கொள்ளையர்களைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் எனவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றனர்.
கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளின் பெறுமதி இதுவரை தெரியவில்லை.
