பட்டம் விட்டு விளையாடிய சிறுவன் குழிக்குள் விழுந்து மரணம் - படங்கள்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_797.html
அல்பிட்டிய பிரதேசத்தில் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்த 9 வயதுச் சிறுவன் ஒருவன் கைவிடப்பட்ட நிலையில் இருந்த மலசலகூடக் குழிக்குள் விழுந்து மரணமாகியுள்ளான். தரிந்து சத்துரங்க லியனகே என்ற 4ம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
35 வயதான இவரது தந்தை கறுவா தகர்க்கும் தொழிலில் ஈடுபடுவதாகவும் தாய் ஆடைக் கடையொன்றில் வேலை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மரணமான சிறுவனுக்கு 12 வயதான மூத்த சகோதரன் ஒருவரும் உள்ளார்.
சம்பவ தினம் பாடசாலை விட்டு வந்த சிறுவன் தாய் வேலை செய்யும் கடைக்கருகே நின்றிருந்த வேளை பட்டம் விடுவதற்காக தனியே சென்றுள்ளார். இச்சந்தர்ப்பத்திலேயே இப்பரிதாபச் சம்வபம் இடம் பெற்றுள்ளது.








