பலஸ்தீனத்தை தனி நாடாக வத்திக்கான் அங்கீகரிப்பு - இஸ்ரேலுக்கு ஏமாற்றம்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_561.html
பாலத்தீன நாட்டை வத்திக்கான் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கும் உடன்பாடு விரைவில் எட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலத்தீன் ஆகிய இரு நாடுகள் தனியாக இருப்பதே இஸ்ரேலுடனான மோதலைத் தணிக்கும் வழி என வத்திக்கான் கூறியுள்ளது. இது தொடர்பிலான புதிய ஒப்பந்தத்தில் பாலத்தீனத்தில் கத்தோலிக்க தேவாலயத்தின் செயல்பாடுகள் குறித்த விடயங்களும் இடம்பெறும்.
இம்முடிவு தொடர்பாக இஸ்ரேல் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பாலத்தீனப் பகுதிகள் மீது கடந்த ஆண்டு இஸ்ரேல் கடுமையான இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.
இந்த அங்கீகாரம் தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இந்த வாரக் கடைசியில் பாலத்தீன அதிபர் மெஹ்மூட் அப்பாஸ், போப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக வத்திக்கான் வரவுள்ளார். கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இரு பாலத்தீன கத்தோலிக கன்னிகாஸ்திரீகளை திருநிலைப் படுத்தும் வைபவத்திலும் அதிபர் அப்பாஸ் கலந்து கொள்வார்.
