இங்கிலாந்து அணிக்காக இனி கெவின் பீட்டர்சன் விளையாட மாட்டார்.

இங்கிலாந்து கிரிக்கெட் விளையாட்டு வீரர், கெவின் பீட்டர்சன் இனி இங்கிலாந்து அணிக்காக விளையாட முடியாது என்று அவருக்குத் தெரிவிக்கப்பட்டிருப்பதாக பிபிசிக்கு வந்த தகவல்கள் கூறுகின்றன.

 லெஸ்டர்ஷையர் அணிக்கு எதிரான கவுண்டி கிரிக்கெட் போட்டியில் சர்ரே அணிக்காக விளையாடிய கெவின் பீட்டர்சன் 326 ஓட்டங்கள் எடுத்த ஒரு சில மணி நேரங்களுக்குப் பின்னர் அவரிடம் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

 இந்தத் தலைமுறையின் மிகச் சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரர்களில் ஒருவராகக் கருதப்படும் கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகிகளுடனும் , இங்கிலாந்து அணிக் கேப்டனுடமும் மிகவும் கொந்தளிப்பான உறவுகளைக் கொண்டிருந்தார். 

இது அவரை முரண்பட்ட கருத்துணர்வை உருவாக்கக்கூடிய ஒரு நபராக உருவாக்கியது. திங்கட்கிழமையன்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பின் புதிய இயக்குநருமான, ஆண்ட்ரூ ஸ்ட்ராஸை பீட்டர்சன் சந்தித்த போது அவர் இனி இங்கிலாந்துக்காக ஆடமாட்டார் என்று அவரிடம் கூறப்பட்டது.


Related

Sports 143421311096841888

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the Week

cartoon

Popular Posts

item