மங்களவிடம் ரூ.1 பில்லியன் நட்டஈடு கேட்டு மஹிந்த கடிதம்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/1.html
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் ஒரு பில்லியன் ரூபாய் நட்டஈடு கேட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சார்பில் கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் சார்பில் சட்டத்தரணி அத்துலபிரியதர்தன டி சில்வாவே இந்த கோரிக்கை கடிதத்தை நேற்று செவ்வாய்க்கிழமை (12) அனுப்பி வைத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவதூறு செய்தல் மற்றும் அவமதித்தல் ஆகிய குற்றச்சாட்டுக்களே மங்கள சமரவீர மீது சுமத்தப்பட்டுள்ளன.
மஹிந்தவின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட மங்கள சமரவீரவிடமிருந்து ஒரு பில்லியன் ரூபாய் நட்டஈடு கோரப்பட்டுள்ளது. அந்த நட்டஈட்டு தொகையை 21 நாட்களுக்குள் வழங்காவிட்டால் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2015 மே 07ஆம் திகதி நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின் போது 'மஹிந்த ராஜபக்ஷவும் அவருடைய குடும்படும் பாரியளவில் கொள்ளையடித்துள்ளனர். அந்த குடும்பத்தின் சொத்து மதிப்பு 18 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையில் இருக்கின்ற முதலாவது ரில்லியன்னாவார்' என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
