ஆறு மணி நேர விசாரணையின் பின்னர் வெளியேறினார் கோட்டா
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_505.html
இன்று விசாரணைக்காக நிதி மோசடி விசாரணைக்குழுவுக்கு வருகை தந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச சுமார் 6 மணி நேரம் விசாரிக்கப்பட்டார்.
2006ம் ஆண்டு இலங்கை விமானப்படைக்கு 'மிக் 27' ரக விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டமை மற்றும் லங்கா ஹொஸ்பிடல் நிறுவனத்தின் ஒரு பகுதியை விற்பனை செய்தமை போன்ற சந்தர்ப்பங்களில் நடைபெற்ற நிதி மோசடிகள் சம்பந்தமாகவே அவர் இன்று விசாரிக்கப்பட்டார்.
கோட்டாபய ராஜபக்ச அங்கு வருகை தரும் போதும் அங்கிருந்து வெளியேறும் போதும் ஊடகவியலாலர்களை சந்திக்க மறுத்தமை குறிப்பிடத்தக்கது.
