கனடாவில் ஐ.எஸ். இயக்கத்தில் இணைய முயன்ற 10 வாலிபர்கள் கைது
http://weligamanewsblog.blogspot.com/2015/05/10_20.html
ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். இயக்கத்தினர் தொடர்ந்து வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த இயக்கத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்து வருகிறார்கள். இவர்களை தடுக்கும் நடவடிக்கையில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு உள்ளன.
இந்தநிலையில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைவதற்காக கனடாவில் உள்ள மான்டிரையல்ஸ் டுருடியு சர்வதேச விமானநிலையத்தில் இருந்து ஈராக் மற்றும் சிரியாவிற்கு செல்ல முயன்ற 10 வாலிபர்களை கனடா போலீசார் அதிரடியாக பிடித்து கைது செய்துள்ளனர். இதுகுறித்து ராயல் கனடா மவுண்டேட் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கைது செய்யப்பட்ட வாலிபர்களிடம் இருந்த பாஸ்போர்ட்டுகள் கைப்பற்றப்பட்டு உள்ளன. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்தனர்.
