புங்குடு தீவு மாணவி கொலை - யாழ்ப்பாண நீதி மன்றத்திற்கும் சேதம்

புங்குடுதீவு மாணவியை மிருகத்தனமாகக் கற்பழித்துக் கொலை செய்த காமுகர்களை நீதிமன்றத்துக்குக் கொண்டு வந்த போது அங்கு கூடியிருந்த மக்கள் கோபமுற்று கலகத்தில் ஈடுபட்டனர்.

இதனால் யாழ்ப்பாண நீதிமன்றம், சிறைச்சாலை பஸ் வண்டி மற்றும் பொலிஸ் பாதுகாப்புக் கட்டிடம் என்பனவற்றுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இங்கு கலகத்தில் ஈடுபட்ட பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புங்குடுதீவில் மிருகத்தனமாகக் கொலை செய்யப்பட்ட வித்தியா என்ற மாணவியின் கொலையுடன் தொடர்புபட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்குமாறு புங்குடு தீவு மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





Related

Local 1387050509483416793

Post a Comment

emo-but-icon

item