கோட்டாபய குறித்த உயர் நீதிமன்றத் தீர்ப்பு யாப்புக்கு முரண்-பிரதமர்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_503.html
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடை இலங்கை அரசியல் யாப்பின் 132 ஆம் சரத்தின் இரண்டாம் பிரிவுக்கு ஏற்ப பலமில்லாத ஒன்று என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.
நாட்டு அரசியல் யாப்பின் இந்த சரத்துக்கு ஏற்ப, இதுபோன்ற தீர்ப்பொன்றை வழங்குவதற்கு குறைந்த பட்சம் நீதிபதிகள் மூவர் கொண்ட குழு இருத்தல் வேண்டும்.
இரு நீதிபதிகள் கொண்ட குழுவுக்கு விசேட முறையீடொன்றை விசாரணைக்கு எடுத்து தீர்ப்பு வழங்கும் அதிகாரம் மட்டுமே உள்ளது.
எனவே, இது தொடர்பில் தான் பிரதம நீதிபதியிடம் விளக்கம் கோரவுள்ளதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
