கெசல்வத்தை புதிய சந்தைக் கட்டட தொகுதி முன்னால் பதற்றம்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_286.html
கெசல்வத்தையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய சந்தைக் கட்டட தொகுதியை எதிர்பாராத விதத்தில் திறந்து வைக்க முற்பட்ட வேளையில் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த புதிய சந்தைக் கட்டட தொகுதி இன்று பிற்பகல் மேல் மாகாண சபை முதலைமைச்சர் பிரசன்னா ரணதுங்கவினால் திறந்து வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக அங்கு விஜயம் செய்த பாணந்துறை பிரதேச சபை எதிர்கட்சித் தலைவர் தாஹிர் பாஸி, புதிய சந்தைக் கட்டட தொகுதியை திறந்து வைக்க முற்பட்டார்.
இந்நிலையில் அங்கு கூடிய ஒப்பந்தக் காரர்களும், பிரதேச வாசிகளும் பாணந்துறை பிரதேச சபை எதிர்கட்சித் தலைவரின் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
பின்னர் பொலிஸாரின் தலையீட்டினால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட அதேவேளை, பிரதேசத்தில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. (DC)




