மட்டக்களப்பில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_148.html
மட்டக்களப்பு வெல்லாவலி பிரதேசத்தில் இன்று மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் வீட்டில் இருந்த குறித்த நபர் பலியாகியுள்ளார்.
பலியான குறித்த நபர் 42 வயது மதிக்கத்தக்கவர் எனவும் ஒரு பிள்ளையின் தந்தை எனவும் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் எனினும் சந்தேக நபர்கள் தப்பித்துச்சென்றதாகவும் பொலிஸ்ஸார் தெரிவித்தனர்.
