ரயிலில் மோதி ஒன்றரை வயதுப் பிள்ளை பலி
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_234.html
வென்னப்புவ பிரதேசத்தில் ரயிலில் மோதி சிறு பிள்ளை ஒன்று மரணமாகியுள்ளது. நேற்று மாலை சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்த ரயிலிலேயே குறித்த பிள்ளை மோதியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
தனது தாயுடன் ரயில் பாதைக்கு அருகே நின்றிருந்த சமயம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மரணமான குழந்தை ஒன்றரை வயதுடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.
