ஈராக்கின் ரமாதி நகரம் ஐ.எஸ் வசம் வீழ்ந்தது
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_450.html
ஈராக் நாட்டின் ரமாதி நகரம் ஐ.எஸ்படையினரிடம் வீழ்ந்துள்ளது. ரமாதி நகரின் பல முக்கிய பகுதிகளை ஐ.எஸ் படையினர் கைப்பற்றியிருந்த நிலையில் ஈராக்கின் அரச படையினர் அங்கு அனுப்பப்பட்டனர். நகரை மீட்க கடுமையாக முயற்சித்த ஈராக் அரச படையினர் கடைசியில் பின்வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
நாம் ரமாதி நகரம் முழுவதையும் தங்களது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக ஐ.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
எனினும் இத்தகவகலை அமெரிக்கா மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நகரம் ஈராக்கின் பெரிய மாகாணமான அன்பார் மாகாணத்தின் தலை நகரமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இது பக்தாதுக்கு மேற்கே 70 மைல்கள் தூரத்தில் அமையப்பெற்றுள்ளது.


