கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி வயலில் விழுந்தது (படம்)
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_424.html
வெலிகம ஹேனகம வீதியில் ஹல்லல பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று வயலுக்குள் விழுந்துள்ளது. குறித்த வீதியில் உள்ள அதிவேக நெடுஞ்சாலை அருகிலேயே இவ்விபத்து இடம் பெற்றுள்ளது. வேகமாக வந்த பேக்கரி ஒன்றுக்குச் சொந்தமான முச்சக்கரவண்டி கட்டுப்பட்டை இழந்ததால் குறித்த சம்வபம் நேர்ந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.
சம்பவத்தில் முச்சக்கர வண்டி கடும் சேதத்துக்குள்ளாகியுள்ள போதும் அதன் சாரதி அதிஷ்டவசமாக காயங்களேதும் இன்றித் தப்பினார்.

