யாழில் புதைக்கப்பட்ட ஆயுதங்களுடனான 4 பெரல்கள் மீட்பு
http://weligamanewsblog.blogspot.com/2015/05/4_17.html
ஊரெழு - கணேச வித்தியாலயத்திற்கு அருகில் நான்கு பெரல்களில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், 1984ம் ஆண்டு எழுதிய கடிதமும் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை ஊரெழு மேற்கு பகுதியைச் சேர்ந்த இராசையா திருச்செல்வம் என்பவரின் காணியில் மதில் கட்டுவதற்கான அத்திவாரம் வெட்டும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து உடனடியாக கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த ஆயுதங்களை கோப்பாய் பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து மீட்டுச் சென்றுள்ளதோடு, தற்போது, கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இவை வைக்கப்பட்டுள்ளன.
இன்று மீட்கப்பட்ட ஆயுதங்கள் நீதிமன்றில் ஒப்படைக்கப்படுமென்றும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
(அத தெரண)

