வில்பத்து பற்றி 2 வாரங்களில் கடைசி முடிவை அறிவிப்பார் ஜனாதிபதி
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_271.html
வில்பத்துவில் நடைபெறுவதாகக் கூறப்பட்டு வரும் நிர்மாணிப்புக்கள் தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதி தனது இறுதி முடிவை அறிவிப்பாரென சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் குறித்த குடியேற்றங்கள் நடைபெறும் இடத்துக்கு பயணம் மெற்கொண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் ஜனாதிபதி தனது முடிவை அறிவிப்பார் என சூழல் அமைச்சின் செயலாளர் நிஹால் ரூப்பசிங்க கூறினார்.
அத்துடன் குறித்த சம்பவம் சம்பந்தமாகத் தெளிவுபடுத்த அமைச்சர் ரிஷாத் பத்தியுத்தீனும் ஊடகவியலாளர் குழு ஒன்றை அங்கு அழைத்துச் சென்று அங்கு எதுவித சட்ட விரோத நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை எனவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
