முதலாவது போட்டியில் பாக்கிஸ்தான் அணி வெற்றி
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_479.html
பாக்கிஸ்தான் அணிக்கும் சிம்பாப்வே அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு20 போட்டி நேற்று லாகூர் கடாபி மைதானத்தில் இடம் பெற்றது. குறித்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணித்தலைவர் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.
அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சிம்பாப்வே அணி 6 விக்கட் இழப்புக்கு 172 ஓட்டங்களைக் குவித்தது. இதில் சிகும்புரா 54 ஓட்டங்களையும் மசகட்ஸா 43 ஒட்டங்களைய்ம் பெற்றது. பாக்கிஸ்தான் அணி சார்பில் முஹம்மட் சமி 3 விக்கட்களையும் வஹாப் ரியாஸ் 2 விக்கட்களையும் கைப்பற்றினர்.
173 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலையில் தனது இன்னிங்ஸை ஆரம்பித்த பாக்கிஸ்தான் அணி ஆரம்பம் முதலே சிம்பாப்வேக்கு நெருக்கடியைக் கொடுத்தது. அதிரடியாக ஆடிய பாக்கிஸ்தானின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான அஹமட் செஹ்தாத் மற்றும் முக்தார் அஹமட் ஆகியோர் ஆகியோர் முதலாவது விக்கட்டுக்காக 142 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை உறுதி செய்தனர்.
இதில் முக்தார் 83 ஓட்டங்களையும் செஹ்தாத் 55 ஓட்டங்களையும் பெற்றனர். சிம்பாப்வே அணி சார்பாக க்ரெமர் 2 விக்கட்களைக் கைப்பற்றினார்.
போட்டியின் சிறப்பாட்டகாரராக பாக்கிஸ்தானின் முக்தார் அஹமட் தெரிவானார்.
