ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 2 பேர் கைது
http://weligamanewsblog.blogspot.com/2015/05/2.html
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் இருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை எதிர்வரும் ஜூன் 1ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு அங்குனுகொலபெலஸ்ஸ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் நாமல் ராஜபக்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் என்று சொல்லப்படும் நபர் துப்பாக்கியுடன் நுழைந்தது சம்பந்தமான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் போதே நீதவான் இவ்வுத்தரவைப் பிறப்பித்தார்.
குறித்த கூட்டத்துக்கு கைத்துப்பாக்கியுடன் வந்திருந்த நாமலின் மெய்ப்பாதுகாவலருக்கும் 1ம் திகதி வரை விளக்க மறியல் நீடிக்கப்பட்டது.
