புதிய வாக்காளர் இடாப்பு தயாரிக்கும் பணி ஆரம்பம்

புதிய வாக்காளர் இடாப்பு தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பான மாதிரிப்படிவம் நேற்று முதல் கிராம உத்தியோகஸ்தர்களினூடாக சகல வீடுகளுக்கும் விநியோகிக்கப்படவுள்ளது. 

வாக்காளர் இடாப்பு தயாரிப்பதற்கான மாதிரிப் படிவத்தில் 1996 ஜூன் முதலாம் திகதியும் அதற்கு முன்னரும் பிறந்த சகல பிரஜைகளும் தமது தகவல்களை வழங்க முடியும். 

கணிப்பீட்டுக்கான அதிகாரிகள் பயிற்றப்பட்டுள்ளதோடு ஓகஸ்ட் மாதத்தில் இது தொடர்பான பெயர்ப்பட்டியல் காட்சிப்படுத்தப்பட உள்ளது. தமது பெயர் உள்ளடக்கப்படாதவர்கள் ஓகஸ்ட் 28ம் திகதிக்கு முன் முறையிடவோ ஆட்சேபனை முன்வைக்கவோ அவகாசம் வழங்கப்பட உள்ளது. 

ஓகஸ்ட் மாத இறுதியில் 2015ஆம் ஆண்டுக்கான உத்தேச வாக்காளர் இடாப்பு காட்சிப்படுத்தப்பட இருப்பதாகவும் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.


Related

Local 7188113157225555206

Post a Comment

emo-but-icon

item